×

கோட்டூர் எளவனூரில் எலி ஒழிப்பு செயல் விளக்க பயிற்சி

மன்னார்குடி, மே 14; கோட்டூர் வட்டாரம் எளவனூர் கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை விரிவாக்க சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழிற்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் பல்வேறு கிராமங்களின் வயல் வெளிகளில் எலித் தொல்லைகளை கட்டுப்படுத்தும் செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை விரிவாக்க சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழிற்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சந்துரு அறிவுறுத்தலின் பேரில் கோட்டூர் வட்டாரத்திலுள்ள பல்வேறு கிராமங்களின் வயல் வெளிகளில் எலித் தொல்லைகளை கட்டுப்படுத்தும் வகையில் பச்சரிசி குருணை, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுடன் புரோமோடைலான் கலந்து எலி விஷ மருந்து பொட்டலங்கள் தயார் செய்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கோட்டூர் வட்டார  வேளாண்மை உதவி இயக்குனர் தங்க பாண்டியன் பங்கேற்று எலி பாதிப்பு நிறைந்த வயல்களில் எலி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை அளித்து எலி விஷ மருந்து பொட்டலங்களை விவசாயிகளுக்கு வழங்கினார். செயல் விளக்க நிகழ்ச்சியில், உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வம், ரம்யா, அட்மா திட்ட வட்டார தொழிற்நுட்ப மேலாளர் செல்வகுமார், உதவி தொழிற்நுட்ப மேலாளர்கள் ரூபினி, அனுசுயா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று எலி விஷ மருந்து பொட்டலங்களை பெற்று அதனை தங்களின் வயல்களில் வைத்து பயனடைந்தனர்.

Tags : Kothur ,
× RELATED மகனுடன் இளம்பெண் கடத்தல் ; வாலிபர் மீது புகார்